பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை முதியவரிடம் விசாரணை

கும்பகோணம், பிப். 14: கும்பகோணத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் திரிஷா (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். தாராசுரத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (55). இவர் அரசலாற்றங்கரையில் சொந்தமாக பட்டறை வைத்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இதில் மகளுக்கு கடந்த 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. சாமிநாதனின பட்டறைக்கு திரிஷா, தினம்தோறும் மாலையில் மரத்தூள்களை எடுப்பதற்காக வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பட்டறைக்கு திரிஷா ெசன்றார். திரிஷா வர நேரமானதால் சிறிது நேரம் கழித்து திரிஷாவின் பெற்றோர் சென்றனர். அப்போது பட்டறை உரிமையாளர் சாமிநாதன், திரிஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியினர், சாமிநாதனை கையும் களவுமாக பிடித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ விஜயா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED பள்ளிப்பட்டியில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரம்