காவிரி படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், பிப்.14: வேதாரண்யம் கரியாப்பட்டினம் வருவாய் அலுவலகம் முன், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கொடுத்த அனுமதியை மத்திரய அரசு ரத்து செய்ய கோரி காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் உட்பட விவசாயிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.  மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேலாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

× RELATED பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்