புத்தூர் அரசு கல்லூரியில் விளையாட்டு போட்டி

தமிழ்த்துறை மாணவிகள் கபடியில் முதலிடம்
கொள்ளிடம், பிப்.14:  புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் நடந்த விளையாட்டு போட்டியில் தமிழ் துறை மாணவிகள் கபடி போட்டியில் முதலிடம் பிடித்தனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து துறைகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான கைபந்து போட்டி நேற்று நடைபெற்றது. விளையாட்டு போட்டியை கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை ஏற்று துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் பிரபாகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கைப்பந்து போட்டியில் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். இதேபோல் பெண்கள் பிரிவுக்கான கபாடி போட்டியிலும் தமிழ்த்துறையை சேர்ந்த மாணவி
களே வெற்றி பெற்றனர்.

× RELATED மாநில விளையாட்டு போட்டி மாதா காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் வெற்றி