×

சீர்காழி குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

சீர்காழி, பிப்.14: சீர்காழி தென்பாதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து டவர் அமைக்கும் இடத்தை  100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து செல்போன் டவர் அமைக்க கூடாது என வலியுறுத்தி தென்பாதி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாகை கலெக்டர் அலுவலகம், சீர்காழி தாசில்தார் அலுவலகம், சீர்காழி நகராட்சி அலுவலகம், சீர்காழி தீயணைப்பு துறை அலுவலகம், தமிழ்நாடு மின்சாரவாரிய அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் சீர்காழி தென்பாதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் செல்போன்டவர் அமைக்கப்படுகிறது. இந்த டவர் அமையவுள்ள இடத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளிலிருந்து செல்போன் டவர் 500 மீ தூரத்திற்குள் அமைக்க கூடாது என்ற விதிமுறைகளும் உள்ளது. இதனை மீறி செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. செல்போன் டவர் அமைக்கப்படும் கட்டிடம் எதிரே பள்ளிக்கூடம், திரையரங்கம் இருப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அமைக்கப்பட இருக்கும் அதிவேக 4ஜி நெட்வொர்க் டவர் அமைக்கப்படுவதால் கதிர்வீச்சின் தாக்கம் அதிகமாக ஏற்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி செல்போன் டவரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Residents ,Cellular Tower ,area ,Sergey ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...