சீர்காழி அருகே சேதமடைந்த உப்பனாறு பாலம் சீரமைக்கப்படுமா? திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் புகார்

சீர்காழி, பிப்.14:சீர்காழி அருகே வெள்ளப்பள்ளத்தில் சேதமடைந்த உப்பனாறு பாலத்தில் விரைவில் சீரமைக்க வேண்டும் என்று திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. நாகை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், சித்திக் மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சசிகுமார் வரவேற்றார். மாநில இளைஞரணி துனை அமைப்பாளர் துரை சிறப்புரையாற்றினரர்.கூட்டத்தில் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் அமைப்பட்ட இரும்புபாலம் பழதடைந்துள்ளது. இதனால் வெள்ளப்பள்ளம் கிராமம் துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும். சாலை, குடிநீர், மின்சார வசதி வெள்ளப்பள்ளம் கிராமத்திற்கு செய்து தர வேண்டும். 100 நாள் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மகளிர் சுயஉதவி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டனர். இதில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கலைவாணன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜீபையர் அகமது ஒன்றிய செயலாளர் பிரபாகரன் அவைத் தலைவர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரமணி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் விஜேஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் முருகன் கலந்து கொண்டனர்.ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்

× RELATED சீர்காழியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம்