×

குமரியில் தங்கியிருந்து 17 இடங்களில் கைவரிசை கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து ₹21 லட்சம் நகை, பணம் மீட்பு

கன்னியாகுமரி, பிப். 14:     கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கடற்கரையில் வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகத்தின் போது 2 பேரிடம் 6 பவுன் செயின் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுபோல் மாவட்டத்தில் பல பகுதிகளில் சமீப காலமாக பேருந்துகளில் பயணிக்கும் பயணி களிடமிருந்து சங்கிலி பறிப்பு மற்றும் அவர்களின் பைகளிலிருந்து பணம் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி நாத் உத்தரவின்பேரில் எஸ்ஐ விஜயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டு இருந்த 3 பேரை  தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.  தொடர்ந்து விசாரணை நடத்தியதில் குமரி மாவட்டத்தில் ஓடும்பஸ்சில் திருட்டு, கோயில்களுக்கு வரும் பெண்களிடம் நகை பறிப்பு போன்ற சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. பிடிபட்டவர்கள் சென்னை சைதாப்பேட்டை அண்ணா காலனியை சேர்ந்த சுவேதா(35), கோவை உக்கடம் மரப்பேட்டை வீதியை சேர்ந்த பாபு(25), ஆந்திர மாநிலம் நெல்லூர் தூமாவரம் ஹப்ர திப்பா கிராமத்தை சேர்ந்த லதா(37) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.  இவர்கள் குமரி மாவட்டத்தில் பல பேருந்து பயணிகளிடம் இருந்து தங்க நகைகள், மற்றும் பணம் திருடியுள்ளனர். இவர்கள் மீது 17 திருட்டு வழக்குகள் மாவட்டம் முழுவதும் உள்ளன.  கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 75.3 பவுன் நகை, ₹3 லட்சத்து 1500 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ₹21 லட்சம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.


Tags : recovery ,persons ,places ,Kumari ,
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...