நாகர்கோவில் அருகே சாலையோரம் திடீர் தீ

நாகர்கோவில், பிப்.14:  சாலையோரம் பற்றியெரிந்த தீயால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் - குளச்சல் சாலையில் பருத்திவிளை பகுதியில் சாலையோரம் புதர்கள் மண்டியுள்ளன. இப்பகுதியில் நேற்று காலையில் திடீரென தீப்பிடித்தது. தீ காய்ந்த புதர்களில் மளமளவென வேகமாக பற்றி எரிந்தது. மேலும் அருகில் உள்ள தென்னந்தோப்புகளிலும் தீ பரவியது. இதனால் ெதன்னை மரங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையோரம் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து அப்பகுதியினர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
× RELATED 30க்கும் மேற்பட்டவை சிக்கின...