இரணியல் அருகே பைக் டயர் வெடித்து 3 வாலிபர்கள் படுகாயம்

திங்கள்சந்தை, பிப்.14: இரணியல் அருகே பொட்டல் குழி பகுதியை சேர்ந்தவர் லியோ பிரமீஷ்(36), இதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்(29), கடவிளை புதுவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர்கள் 3 பேரும் கட்டிட ெதாழிலாளர்கள். நேற்று மாலை வேலைக்கு சென்றுவிட்டு ஒரே பைக்கில் தக்கலையில் இருந்து திங்கள்சந்தை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அஜித்குமார் பைக்கை ஓட்டி வந்தார். இரணியல் பேரூராட்சி அலுவலகம் அருகே வந்தபோது திடீர் என்று பைக்கின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதில் நிலை தடுமாறிய பைக் அப்பகுதியில் உள்ள கால்வாய் தடுப்பு சுவரில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 3 பேரும் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

× RELATED கோயில் விழாவில் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது