×

கன்னியாகுமரியில் சூறைக்காற்று 2வது நாளாக படகு சேவை ரத்து

கன்னியாகுமரி, பிப்.14:  கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்று காரணமாக நேற்று 2வது நாளாக படகு சேவை ரத்து செய்யப்பட்டது.கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக தினமும் காலை 7.45 மணிக்கு படகு சேவை தொடங்கும். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை கன்னியாகுமரியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் படகுசேவை நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதுபோல் நேற்றும் சூறைக்காற்று காரணமாக படகு சேவை தொடங்கப்படவில்லை. படகு டிக்கெட் வாங்க காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மாலை வரை இதே நிலை நீடித்ததால் நேற்று 2வது நாளாக படகு சேவை ரத்து செய்யப்பட்டது.




Tags : Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...