தமிழ்ச்சங்க பொன்விழா தமிழ் மாநாடு பேரணி

புதுச்சேரி, பிப். 14:  புதுவை தமிழ்ச்சங்க பொன்விழா தமிழ் மாநாடு மேலாண்மை குழு உறுப்பினர் சிவா எம்எல்ஏ., சங்க தலைவர் முத்து ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புதுவை தமிழ்ச்சங்க பொன்விழா தமிழ் மாநாடு-2019 வருகிற 16, 17ம் தேதிகளில் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலை பள்ளியில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. முன்னதாக நாளை (15ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு ஏஎப்டி திடலில் இருந்து புறப்படும் மாநாட்டு பேரணியை முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.

Advertising
Advertising

பேரணியில் தமிழர் நலன் சார்ந்த கலைக்குழுக்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள், பொதுமக்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதில் மாணவ, மாணவிகள் திருவள்ளுவர் படம் பொறித்த பனியன், முகமூடி அணிந்து பங்கேற்கின்றனர். இது உலக சாதனை நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.  16ம் தேதி காலை 8.15 மணிக்கு மாநாட்டு கொடி ஏற்றப்படுகிறது. மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழறிஞர்கள் கலந்து ெகாள்கின்றனர். முதல்வர் நாராயணசாமி தொடக்க உரையாற்றி, மாநாட்டு மலரை வெளியிடுகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: