தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை நடத்த இந்திய கம்யூ. கோரிக்கை

புதுச்சேரி, பிப். 14:   இந்திய கம்யூ., புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் காமராஜ்நகர் தொகுதியில் துரை.செல்வம் தலைமையில் நடந்தது. துணை செயலாளர் கீதநாதன் அஞ்சலி தீர்மானங்களை முன்மொழிந்தார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் அஜீஸ்பாஷா, மூத்த தலைவர் விஸ்வநாதன், மாநில செயலாளர் சலீம், துணை செயலாளர் அபிஷேகம், பொருளாளர் வ.சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து நடத்த வேண்டும். இறக்குமதி மணலை அரசே நேரடியாக கூட்டுறவு அமைப்புகள் மூலமாக விநியோகம் செய்ய வேண்டும். வீட்டுவரியை குறைப்போம் என்ற முதல்வரின் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஹெல்மெட் அணிவதை சட்டத்தின் மூலம் நிர்பந்தப்படுத்த அமல்படுத்தக்கூடாது. ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவதற்கு புதுச்சேரியை சார்ந்த ஏழைகளுக்கான வருமான வரம்பை, ஜிப்மர் நிர்வாகம் உயர்த்த வேண்டும்.
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 69 சத இடஒதுக்கீடு மசோதாவை புதுச்சேரி அரசு நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.× RELATED மண்டபம் காந்திநகரில் அரசு பஸ்கள்...