×

கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு மாத சுயதொழில் பயிற்சி

புதுச்சேரி, பிப். 14: புதுச்சேரி குருமாம்பட்டு காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 19ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை புதுவை பகுதியை சேர்ந்த விவசாய சுயதொழில் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் அங்கக (இயற்கை வழி) வேளாண் மற்றும் நுண்பாசன தொழில் நுட்பவியலாளர் என்ற திறன் வளர்க்கும் தலைப்புகளிலான பயிற்சிகள், இந்திய விவசாய திறன் கழகத்தின் நிதியுதவியுடன் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பயிற்சிக்கும் 40 வயதிற்கு உட்பட்ட 20 நபர்கள் தேர்வு செய்து, தொழில்நுட்ப வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தகுதி அடிப்படையில், முன்னால் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் புதுவை பகுதியை சேர்ந்தவர்கள் கீழ்க்கண்டவர்களிடம் தொடர்பு கொண்டு, வருகிற 18ம் தேதிக்குள் பதிவு செய்து பயிற்சி பெற்று பயன் பெறலாம். பங்கு பெறும் பயிற்சியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். இதில் அங்கக (இயற்கை வழி) வேளாண்மை பயிற்சிக்கு முனைவர் விஜயகுமார் (பூச்சியியல் நிபுணர் - கைபேசி: 9442525675), நுண்பாசன தொழில் நுட்பவியலாளர் பயிற்சிக்கு பொறியாளர் பாஸ்கரன் (பயிற்சி உதவியாளர் - கைபேசி: 9489052305) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...