×

வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பதிறன் போட்டி

நெல்லை, பிப். 14:  வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் ‘டெக்னோபெட்- 2019’ என்னும் தலைப்பில் தொழில்நுட்பத் திறன் காண் போட்டி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கணினிப்பொறியியல் துறை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிகளில் 3ம் ஆண்டு மாணவர் கோனார் வெங்கடேஸ் வரவேற்றார். 4ம் ஆண்டு மாணவி பைசா முபீனா, துறை நடவடிக்கைகளை விளக்கிக் கூறினார். 4ம் ஆண்டு மாணவி ஜாஸ்மின், அறிமுக உரையாற்றினார். கணினித் துறைத் தலைவர் பாபு ரங்கராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முகமது ஷெரிப் தலைமை வகித்துப் பேசுகையில், ‘‘தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து விட்டு பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு அறியும் ஆற்றல் ஆழமாக இருப்பதுடன் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் கணினிப்பொறியியல் துறை மாணவர்களுக்கு அனைத்துத்துறைகளிலும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது’’ என்றார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய துறைத் தலைவர், பாபு ரங்கராஜன் பேசுகையில் உயர்கல்வியை தொடராமல் தொழில்நுட்பக் கல்வியை மட்டும் பெற்றவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்வது கடினம்.  எனவே, மாணவர்கள் உயர்கல்வி பெறுவது மிகவும் அவசியம் என்றார். இதையொட்டி செயல்திட்ட விளக்கம், வினாடி- வினா போன்ற தொழில்நுட்ப விளையாட்டுப் போட்டிகளும், டிக்டாக், சிறந்த மேலாளர், புதையல் வேட்டை, பப்ஜீ உள்ளிட்ட பல புதுமையான விளையாட்டு போட்டிகளும்  நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2ம் ஆண்டு மாணவி ரஹ்மத் சஞ்சிதா நன்றி கூறினார்.வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட தொழில்நுட்பத் திறன் காண் போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழகப்பட்டது.

Tags : Valliyur Pet Engineering College ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது