தென்காசி ஏ.ஜி. பள்ளி ஆண்டு விழா

தென்காசி, பிப்.14: தென்காசி ஏ.ஜி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 41வது ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் ஜெயராஜ் தலைமை வகித்தார். முதல்வர் கனிராஜ் முன்னிலை வகித்தார். முதல்வர் மனோரஞ்சிதம் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் மாணவ மாணவிகளின் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராஜசேகர், புஷ்பாராஜசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். விழாவில் அனைத்து மாணவ மாணவிகள், ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED பால்குட திருவிழா