அம்பையில் ஆதியோகி ரதத்திற்கு வரவேற்பு

அம்பை, பிப்.14:  கோயம்புத்தூர் அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள  ஈஷா யோக மையத்தில் வரும் மார்ச் 4ம் தேதி மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.  அந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டி ஆதியோகி ரதம் ஊர்வலமாக தமிழகம் ழுழுவதும் எடுத்து வரப்படுகிறது. அதன்படி கோவையிலிருந்து பிப். 1ம் தேதி புறப்பட்ட ரதம்,  அம்பை வந்தது.  திலகர்புரம் பிரதான சாலையில் உள்ள சத்குரு சன்னதியில் மேள தாளங்கள் முழங்க குரு பூஜை, ஈசா யோகா ஆரத்தி பூஜை செய்து ஆதியோகி ரதத்துக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதில் அமபை பகுதி சிவனடியார்கள், ஈஷா தன்னார்வ தொடர்கள், திலகர்புரம் சந்தை வர்த்தகர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டு வரவேற்று வழிபாடு செய்து தரிசித்தனர். அங்கிருந்து அம்பை அகஸ்தியர் கோயில் தெற்கு சங்கரன்கோயில், பாபநாசம் ஆழ்வார்குறிச்சி, பொதுக்குடி வழியாக மீண்டும் அம்பை வந்தது. பின்னர் கல்லிடைக்குறிச்சி  வழியாக குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சென்றது.

× RELATED சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில்...