திருக்குறுங்குடியில் விஷம் குடித்த முதியவர் சாவு

களக்காடு, பிப். 14:  களக்காடு அடுத்த திருக்குறுங்குடி பெரியகுளத்து கரையோரம் உள்ள இசக்கியம்மன் கோயில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி  இறந்தார். இருப்பினும் அவரை பற்றிய விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: