செங்கோட்டை, கடையநல்லூரில் அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

செங்கோட்டை, பிப். 14:  செங்கோட்டை, கடையநல்லூரில் அதிமுக சார்பில் தமிழக அரசின் மக்கள் நலத் திட்ட சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள் நடந்தன.செங்கோட்டை நகர அதிமுக சார்பில் தாலுகா அலுவலகம், விஸ்வநாதபுரம் பகுதிகளில் நடந்தது. பிரசார கூட்டத்திற்கு செங்கோட்டை நகரச் செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை வகித்தார். தலைமைக்கழகப் பேச்சாளர்  தீப்பொறி முருகேசன் தமிழக அரசின் பட்ஜெட் மற்றும்  மக்கள் நலத் திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். கூட்டத்தில்  அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சிவனுபாண்டியன், நகர துணைச் செயலாளர் பூசைராஜ், நகர அவைத்தலைவர் தங்கவேலு, சிறுபான்மையினர் பிரிவு ஞானராஜ், எம்ஜிஆர் மன்றச்செயலாளர் சுப்பிரமணி, மாணவர் அணி இணைச்செயலாளர் ரஹ்மத்துல்லா, மாவட்டப் பிரதிநிதிகள் லட்சுமணன், மைதீன்பிச்சை, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜகோபாலன், திலகர், வட்டச்செயலாளர் கோவிந்தன், வார்டு நிர்வாகிகள் கோவிந்தன், கணேசன், சக்திவேல், சேது, மணி என  திரளானோர் பங்கேற்றனர்.கடையநல்லூர்:  இதேபோல் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கடையநல்லூரில்  கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் முன்பு நடந்த தெருமுனை பிரசார கூட்டத்திற்கு நகரச் செயலாளர் கிட்டுராஜா தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் முருகன், முத்துக்கிருஷ்ணன், அருண், குருசாமி, அமராவதிமுருகன், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர் குமுதாபெருமாள் சிறப்புரையாற்றினார். எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் புகழேந்தி, இளைஞர் பாசறை செயலாளர் ரஜேந்திரபிரசாத், சவூதிஅரேபியா ஜெ.பேரவை செயலாளர் மைதீன், ஐவர்குலராஜா, அப்துல்ஜப்பார், அழகர்சாமி, பால்பாண்டி, பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் சுங்காமுத்து உதுமான்மைதீன், குமார், யாக்கோபு, பிச்சுமணி, காளிராஜ், அயூப்கான், மாரியப்பன், ஜெயமாலன், மெடிக்கல் சரவணன், சிங்காரவேல், அலெக்ஸ், சீதாராமன், சைபுல்லா, சத்யா, கோவிந்தன், கணபதி, அய்யம்பெருமாள், மருதையா, காளியப்பன், மருது, கல்யாணி, பொன்னுசாமி, காளி, பாண்டி, ரவி சுப்பிரமணி, பாப்பாத்தியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாரியப்பன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: