×

தங்கத் தேர் சீரமைப்பு பணி தீவிரம் அடுத்த வாரம் வெள்ளோட்டம் அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை, பிப்.14: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்கத் தேர் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அடுத்த வாரம் வெள்ளோட்டம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மரத்தேர் எனப்படும் மகாரதம், வெள்ளித்தேர், தங்கத்தேர் ஆகியவவை சுவாமி திருவீதியுலாவுக்கான பிரத்யேக வாகனங்களாகும்.தீபத்திருவிழாவில், மரத்தேர், வெள்ளித்தேர் பயன்படுத்தப்படும். தங்கத்தேர் மட்டும் திருக்கோயில் 3ம் பிரகாரத்தில் பக்தர்கள் விரும்பும் நாட்களில் நேர்த்திக்கடனாக இழுத்து செல்வது வழக்கம். இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணி காரணமாக கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தங்கத்தேர் பவனி செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்த பிறகு, தங்கத்தேரை மீண்டும் சுவாமி வீதியுலாவுக்கு பயன்படுத்த முயன்றனர். ஆனால், தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பராமரிப்பின்றி ஒரே இடத்தில் தேர் நிறுத்தியிருந்தால், அதன் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டிருந்தது.எனவே, தங்கத் தேரை முழுமையாக சீரமைத்து (மராமத்து பணி) பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, உபயதாரர்களின் காணிக்கை மூலம் ₹3.50 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் சீரமைக்கும் பணி கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.இப்பணியை நேற்று கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர், அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு அலுவலர் ஜான்சிராணி ஆகியோர் பார்வையிட்டனர்.இந்நிலையில், தங்கத் தேர் சீரமைப்பு பணி இன்னும் சில நாட்களில் முடியும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து, அடுத்த வாரம் கோயில் 3ம் பிரகாரத்தில் தங்கத்ேதர் வெள்ளோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : sir ,Annamalaiyar temple ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...