இருதரப்பினர் மோதல் 2 பேர் கைது

திருக்கோவிலூர், பிப். 14:  திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காத்தவராயன்(60) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று கோவிந்தராஜையும், அவரது தம்பி தணிகாசலத்தையும் ஆபாசமாக திட்டி தாக்கி  காத்தவராயன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் காத்தவராயனை ஆபாசமாக திட்டி தாக்கி தணிகாசலம் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் காத்தவராயன் மீதும், காத்தவராயன் கொடுத்த புகாரின் பேரில் தணிகாசலம் மீதும் திருக்கோவிலூர் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிந்து, அதில் இருவரையும் கைது செய்தனர்.

× RELATED இருதரப்பு மோதலில் 5 பேர் மீது வழக்கு