மகளிர் விடுதிகளை பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம், பிப். 14:  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நலம்-மகளிர் நலம்-சென்னை உயர்நீதிமன்றம் ஆணையில், பணிபுரியும் மகளிர் விடுதிகளை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான சட்டம் 2014 கீழ் வரும் 28ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான சட்டம் 2014 கீழ் வரும் 28ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பதிவு செய்யப்படாமல் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய உரிய சான்றுகளுடன் தங்கள் விடுதிகளின் கருத்துருக்களை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு விடுதிகள் பதிவு செய்யாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் அந்த விடுதிகளை நடத்த தடை உத்தரவும், விடுதி உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: