×

கணினி ஆபரேட்டர்கள் ஜூனியர் அசிஸ்டென்டுகளாக நியமனம் எழுத்துத்தேர்வு மூலம் பணியாணை வழங்க அரசு நடவடிக்கை ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வரும்

வேலூர், பிப்.14:மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் கணினி ஆபரேட்டர்களை இளநிலை உதவியாளர்களாக பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் கடந்த 2005ம் ஆண்டு மே 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு வருவாய் நிதி ஆண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடல் உழைப்பு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு ₹133ல் இருந்து ₹214 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. மேலும் இத்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பயனாளிகளுக்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படுகிறது. மேலும் அவர்கள் ெசய்யும் வேலை, பணி செய்யும் நாட்கள் என அனைத்து நடவடிக்கைகளும் கணினியில் பதிவேற்றப்படுகிறது.

இதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் ₹7 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் மாதம் ₹12 ஆயிரம் வரை பெறுகின்றனர். இவர்கள் தங்களை இளநிலை உதவியாளர் நிலையில் பணியமர்த்தி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.இதற்கிடையில் ஊதியம் குறைவு, முறைகேடு உட்பட பல்வேறு காரணங்களால் பணியில் இருந்து விலகி சென்று விட்டனர். தற்போது மாநிலம் முழுவதும் 1200 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தவிர அவுட்சோர்சிங் அடிப்படையிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நியமிக்கப்பட்ட கணினி ஆபரேட்டர்களை எழுத்துத்தேர்வு நடத்தி இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்களுக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் கணினி ஆபரேட்டர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Tags : Computer Operators ,Rural Development Department ,Junior Assistants ,
× RELATED வலங்கைமான் அருகே மூங்கில்...