2 வாலிபர்களை தாக்கியவர் கைது

திருக்கோவிலூர், பிப். 14:  திருக்கோவிலூர் அடுத்த மாடாம்பூண்டியை சேர்ந்தவர் துரை மகன் ராம்குமார்(32). தனியார் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வரும் இவர் சம்பவத்தன்று இவரும், இவரது நண்பர் பாலமுருகனும் மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த முருகானந்தம்(40) என்பவர் சாலையில் கிடந்த கேபிள் டிவி வயரை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வயர் ராம்குமார் மீது பட்டதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம், ராம்குமாரையும், அவரது நண்பர் பாலமுருகனையும் ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராம்குமார், திருப்பாலப்பந்தல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் முருகானந்தம் மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: