தொழில்நுட்ப மேம்பாட்டு பணி 16, 17ம் தேதிகளில் மின்கட்டண இணையதள சேவை இயங்காது

திருச்செந்தூர்,  பிப். 14: திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்பகிர்மான கழக கணினி  தொழில்நுட்ப மேம்படுத்தும் பணிகள் நடைபெற இருப்பதால், வருகிற 16 மற்றும்  17ம் தேதிகளில் இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வசதி  நிறுத்தம் செய்யப்படுகிறது. 16ம் தேதி மின்வாரிய அலுவலக வேலை நாளாக  இருப்பினும் மின் கட்டண வசூல் மையம் செயல்படாது. 18ம் தேதி காலையில் இருந்து  வழக்கம்போல் இணையதளம் வாயிலாகவோ அல்லது பிரிவு அலுவலக வசூல் மையங்களிலோ  நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தலாம்.    16ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய  நாட்கள் மின் செலுத்த இறுதி நாளாக உடைய நுகர்வோர், 18ம் தேதி ஒரு நாள் மறுஇணைப்பு கட்டணம் மற்றும் தாமத செலுத்து கூடுதல் கட்டணம் இன்றி மின் கட்டணம்  செலுத்தலாம்.    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

× RELATED மேம்பாட்டு பணிகளுக்கு பின்பு...