காங். தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கடலூரில் உற்சாக வரவேற்பு

கடலூர், பிப். 14: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ். அழகிரிக்கு கடலூரில் கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் முதல் முறையாக அழகிரி கடலூருக்கு வருகை தந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் கடலூர் நகரில் காங்கிரஸ் கொடி தோரணங்கள் வைக்கப்பட்டு வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. தனது சொந்த ஊரான கீரப்பாளையத்திலிருந்து கடலூர் வருகை தந்த அழகிரிக்கு முதுநகர் பகுதியில் இருந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

 பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழகிரி அழைத்துவரப்பட்டார். பின்னர் மஞ்சக்குப்பத்தில் உள்ள காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை ஆகிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தார். கடலூர் நகர செயலாளர் கோபால் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராஜன் மற்றும் நகர தலைவர் வேலுசாமி, மாவட்ட துணை தலைவர் ரங்கமணி, மாநில பொதுக்குழு குமார், வட்டார தலைவர் ரமேஷ் ரெட்டியார், மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மார்க்கெட் மணி, சுந்தர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பண்ருட்டி வேலுமணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சிவப்பிரகாசம், செந்தில், ஜெயராமன், ராஜேஷ், காமராஜ் மற்றும் காங்கிரஸ் தேசிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், தொழிலாளர் அணி ராமராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

× RELATED மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்: கே.எஸ்.அழகிரி