ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு கோவில்பட்டி கோயிலில் பரிகார ஹோமம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கோவில்பட்டி, பிப். 14: கோவில்பட்டி  செண்பகவல்லியம்மன் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு  சிறப்பு பரிகார ஹோமம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.நேற்று மாசி மாத பிறப்பையொட்டி காலை 6.16 மணிக்கு ராகு பகவான் கடக  ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியில் இருந்து  தனுசு ராசிக்கும் பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி  அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் ராகு -கேது பெயர்ச்சி  விழா நடந்தது. காலை 5.30 மணிக்கு சிறப்பு பரிகார ஹோமம் நடந்தது. தொடர்ந்து  காலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு  அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. கோயில் செயல் அலுவலர்  பாலசுப்பிரமணியராஜா, ஜனகல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, தலைமை எழுத்தர்  ராமலிங்கம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்  செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: