×

அரசு மருத்துவமனை முன் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் வேகத்தடை அமைக்க கோரிக்கை

திருச்சுழி, பிப். 13: நரிக்குடியில் அரசு மருத்துவமனை முன், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நரிக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அருப்புக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீரசோழன், நாலூர், கட்டனூர், மறையூர் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இந்நிலையில், பிரதான சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், நோயாளிகள் அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர். இதனால், மருத்துவமனை முன் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வேகத்தடை அமைக்க இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து நாலூர் மணி கூறுகையில், ‘நரிக்குடி அரசு மருத்துவமனைக்கு தினசரி 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனை ராஜபாளையத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. திருப்புவனத்திலிருந்து நரிக்குடி செல்லும் சந்திப்பு சாலையும் இந்த இடத்தில் கூடுவதால், வருகிற வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் சாலையை கடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன், வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றார்.
பட்டாசு மூலப்பொருள் பதுக்கல்: ஒருவர் கைது

Tags : government hospital ,
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்