கண்டுகொள்ளாத மாத்துக்கண்மாய் தார்ச்சாலை

காளையார்கோவில், பிப். 13: காளயார்கோவில் அருகில் காளக்கண்மாய் ஊராட்சிக்கு உட்பட்ட மாத்துக்கண்மாய், முடுக்கூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.காளையார்கோவில் அருகில் ஆண்டிச்சியூரணி வழியாகச் செல்லும் காளக்கண்மாய் ஊராட்சிக்கு உட்பட்ட மாத்துக்கண்மாய், முடுக்கூரணி, கல்லுவலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிரமங்களுக்குச் செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இப்பகுதியில் அதிகளவு விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் விவசாயத்திற்குத் தேவையான இடு பொருட்கள், பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற அனைத்துத் தேவைகளுக்கும் இச்சாலையை அதிகளவு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு மகவும் மோசமான நிலையில் உள்ள இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.மேலும் கிராமங்கள் நிறைந்த அப்பகுதியில் பிரசவம், விபத்து மற்றும் அவசர தேவைகளுக்கு வாடகை கார், ஆட்டோ, போன்ற வாகனங்கள் வருவதற்கு தயக்கம் அடைகின்றனர். தற்போது அப்பகுதியில் இயங்கி வந்த மினிபஸ் ரோடு பள்ளம் மேடாக உள்ளதால் அடிக்கடி பழுது ஏற்படுகின்றது. இதனால் அப்குதியில் வருவதில்லை இதனால் இருசக்கர வாகனம் இருந்தால் மட்டுமே தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நிலையில் அப்பகுதி கிராமமக்கள் உள்ளனர். எனவே அப்பகுதிக்குச் செல்லும் தார்ச்சாலையை தரமான சாலையாக அமைத்து தரவேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அப்பகுதியைச் சேர்ந்த மைக்கில் கூறுகையில், ‘ஆண்டிச்சியூரணியில் இருந்து முடுக்கூரணி, மாத்துக்கண்மாய், கருங்குளம் வரையில் உள்ள கிராமபொது மக்கள் அதிகளவு இச்சாலையைப் பயன்படுத்துகின்றனர் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும். பலமுறை அதிகாரிகளிடமும் அரசியல் வாதிகளிடமும் புகார் அளித்துள்ளோம் எந்த நடவடிக்கையும் இல்லை சில வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலை சில மாதங்களிலே குண்டும் குழியுமாக மாறிவிட்டன. இதுவரைக்கும் எந்த மராமரத்துப் பணியும் நடக்கவில்லை’ என்றார்.

× RELATED ரூ.2.85 கோடியில் தார்ச்சாலை அமைக்க பூமிபூஜை