பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் ஒருவர் கைது

காரைக்குடி, பிப். 13: காரைக்குடி பர்மா காலனி அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (49) இவர் ஆலங்குடியார் வீதி நகராட்சி துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம்  காலவாய்பொட்டல் கக்கன் தெருவைச் சேர்ந்த மெய்யர் மகன் சேது (18), கணேசபுரத்தைச் சேர்ந்த ரவி மகன் ஹிரிஹரன் (18) ஆகியோர் பள்ளிசுற்றுச்சுவரில் போஸ்டர் ஒட்டினர். இதை சுப்பிரமணியன் தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பள்ளியிள் உள்ளே நுழைந்து தரக்குறைவாக பேசி சுப்பிரமணியனை தாக்கினர். இதுகுறித்து சுப்பிரமணியன் காரைக்குடி தெற்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சேதுவை கைது செய்தனர். தலைமறைவான ஹரிஹரனை தேடி வருகின்றனர்.

× RELATED பள்ளி ஆசிரியையிடம் போலீஸ் விசாரணை