பாஜ மாவட்ட நிர்வாகிக்கு ‘அல்வா’ கொடுத்தவர் கைது

செம்பட்டி, பிப்.13: வேடசந்தூரில் பாஜ மாவட்ட பொருளாளரிடம் செக் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

வேடசந்தூரை சேர்ந்தவர் பாலமுருகன்(40). பாஜ மாவட்ட பொருளாளராக உள்ளார். இதே ஊரை சேர்ந்தவர் வைரப்பெருமாள் மகன் வேல்முருகன்(45). பாலமுருகன் தனக்கு சொந்தமான வீட்டை, வேல்முருகனுக்கு கிரையம் செய்து கொடுத்தார். இதற்காக வேல்முருகன் ரூ.15 லட்சத்திற்கு செக் கொடுத்துள்ளார். வங்கியில் போட்டபோது பணம் இல்லை என்று செக் திரும்ப வந்துவிட்டது. இதையடுத்து வேல்முருகனிடம் பணத்தை கொடுக்குமாறு பாலமுருகன் கேட்டு வந்தார். ஆனால் பணத்தை தராமல் வேல்முருகன் அல்வா கொடுத்து வந்தார். இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் வேல்முருகன் கைது செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பாலமுருகன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, உடனே பிடிவாரண்டு பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வேல்முருகனை கைது செய்த போலீசார், நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ரிஸ்னாபர்வீனா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரை 15 நாள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Stories: