பழங்கள் வாங்க திடீரென வாகனம் நிறுத்துவதால் அடிக்கடி விபத்து கொடைரோடு சாலை ெகால்லுது ஆளை போலீசார் கட்டுப்படுத்துவார்களா?

செம்பட்டி, பிப்.13: கொடைரோடு சாலையில் பழங்கள் வாங்க திடீரென வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பஸ், கார், அதிக சக்கரங்கள் பொருத்தப்பட்ட கdfடெய்னர் உள்பட தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவை. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் கொடைரோடு பழங்கள் பிரசித்தம். இதுபோன்ற வெளியூர் வாகனங்களை குறிவைத்து, நான்கு வழிச்சாலையின் இருபுறமும் உள்ள தோட்டங்களில் தற்காலிக பழக்கடைகள் செயல்படுகின்றன.கொடைரோடு துவங்கி, சின்னாளபட்டி வரையான 12 கிலோமீட்டர் தூரத்தில் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. துவக்கத்தில் ரோட்டோர தோட்டங்களில் பழப்பெட்டிகளை வைத்து விற்பனை செய்து வந்த வியாபாரிகள், ரோட்டார பாலங்களின் விளிம்புகளில் நின்று பழப்பெட்டிகளுடன் கூவி அழைக்கும் அளவிற்கு போட்டி அதிகரித்துள்ளது.

Related Stories: