பிளாக்கில் மது விற்ற மூன்று பேர் கைது

கொடைக்கானல், பிப்.13: கொடைக்கானலில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை கண்டித்து சில வாரங்களுக்கு முன் பொதுமக்கள் பெருமாள் மலை பகுதியில் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து சட்டவிரோத மது விற்பனையை தடுக்க கொடைக்கானல் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள பழம்புத்தூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன்(44), கொடைக்கானல் நகரம் பகுதியில் கலையரங்கம் அருகே மது விற்பனை செய்த கன்னிவாடி பகுதியை சேர்ந்த முருகன் மகன் முத்துப்பாண்டி(34), கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் மது விற்ற முனியாண்டி மகன் கென்னடி(54) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி கொடைக்கானல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

× RELATED மது விற்ற 7 பேர் கைது