நாட்றம்பள்ளி அருகே சிறுமியை கடத்தியதாக வாலிபர் மீது வழக்கு

நாட்றம்பள்ளி, பிப்.13: நாட்றம்பள்ளி தாலுகா அம்மணாங்கோயில் ஊராட்சி முத்தானூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வள்ளிமணவாளன் மகன் விமல்(27) என்பவர் சிறுமியை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவருக்கு வேறு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென சிறுமியை காணவில்லை. விசாரணையில் விமல் அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

× RELATED பெண்ணிடம் 4 பவுன் பறிப்பு