திருமழப்பாடியில் 9ம் தேதி ரேஷன் குறைதீர் கூட்டம்

அரியலூர், பிப். 7: திருமழப்பாடியில் பொது விநியோக குறைதீர் கூட்டம் வரும் 9ம் தேதி நடக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 9ம் தேதி நடக்கிறது. அதில் அரியலூர் வட்டத்தில் திருமழப்பாடி, உடையார்பாளையம் வட்டத்தில் இடையார், செந்துறை வட்டத்தில் குழுமூர், ஆண்டிமடம் வட்டத்தில் வாரியங்காவல் கிராமத்தில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. அரியலூர் வட்டத்துக்கு தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம், உடையார்பாளையம் வட்டத்துக்கு கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), செந்துறை வட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரும், ஆண்டிமடம் வட்டத்துக்கு பொது விநியோக திட்ட துணை பதிவாளரும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட கூட்டத்தை வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவர்.

× RELATED தமிழகத்தில் இருந்து...