அரியலூர் அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் தொங்கும் தெரு விளக்கு: வாகன ஓட்டிகள் அச்சம்

அரியலூர்,பிப், 7: அரியலூரில் அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் ஆயுதபடை காவல் துறை  அலுவலகம் எதிரில்  அமைந்துள்ள மின்கம்பத்தில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில்  தெருவிளக்கு  தொங்கி கொண்டு உள்ளது.    அரியலூரில் அரசு அலுவலர்கள் குடியிருப்பு, திருமண மண்டபம், ஆயுதபடை காவலர்களுக்கான குடியிருப்பு போன்றவை இப்பகுதியில் அமைந்துள்ளது.இச்சாலையில் இரண்டு இடங்களில் இதுபோன்ற மின்கம்பத்தில் அபாயகரமான நிலையில் மின்விளக்குகள் தொங்கி கொண்டுள்ளது. சாலையில் கடந்து போகும் பொதுமக்கள் மீது இந்த மின்விளக்கு விழும் நிலையில் உள்ளது. இதனால் இச்சாலையில் அச்சத்துடனே பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

× RELATED டாஸ்மாக் கடை முன் நிறுத்தியிருந்த ஆட்டோ மாயம்