பெரம்பலூரில் 7ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர், பிப். 1: பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச ஒருநாள் பயிற்சி முகாம் வருகிற 7ம் தேதி நடக்கிறது. நாட்டுக்கோழி வளர்ப்பு இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, கோழி குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் வேலைநாட்களில் காலை 10மணிக்கு மேல் மாலை 5 மணி வரை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்யலாம். இவ்வாறு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

× RELATED பெரம்பலூரில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி