×

அரியலூரில் மாநில தேர்தல் ஆணையர் பேட்டி முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

அரியலூர், பிப். 1: அரியலூரில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடந்தது. தடகளம், கைப்பந்து, மேசைப்பந்து, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, பூப்பந்து ஆகிய  போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பின்னர் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஹாக்கி பயிற்றுநர் லெனின்  வரவேற்றார். கோட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன்  முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தலைமை வகித்து வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கினார். எஸ்பி னிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.அரியலூர், பிப். 1: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமாமன விஜயலட்சுமி பங்கேற்றார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடந்தது. இதைதொடர்ந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. 31ம் தேதிக்குள் பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டிக்கான இடஒதுக்கீடு பணிகள் முடிந்து விடுமென உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தோம்.தற்போது பணிகள் நடந்து கொண்டிருப்பதால் கூடுதலாக ஒரு வாரகாலம் தேவைப்படுகிறது. அதையும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். எனவே வரும் 10ம் தேதி தேர்தல் ஆணையத்தில் இருந்து தமிழக அரசுக்கு இடஒதுக்கீடு குறித்து அறிக்கையை சமர்ப்பித்து விடுவோம். அதன்பிறகு அரசிடமிருந்து ஆணை வெளியிட வேண்டும். மே இறுதி வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை பிரசுரம் செய்து ஜூன், ஜூலை மாதத்தில் நேரடி தேர்தல் மற்றும் மறைமுக தேர்தல் முழுமையாக முற்றுப்பெறும் என்றார்.
தேர்தல் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். படிவங்கள் சட்டபூர்வமாக உள்ளவற்றையும் அரசியல் கட்சிகளுக்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் வசதிகள் என்னென்ன என்பதை கேட்டு பெற்றிருக்கிறோம். அதிகாரிகளிடமிருந்து அதற்கான  புள்ளி விவரங்கள் பெற்று இருக்கிறோம் என்றார். உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது மற்றும் வாக்காளர் பட்டியல் விவரம் தயார் செய்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் ஆய்வு கூட்டங்கள் முடிவடைந்துள்ளது என்றார். இதைதொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தார்.

Tags : State Election Commissioner ,Ariyalur ,Cup ,Chief Minister ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...