காடுவெட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவு

அரியலுார், ஜன.31: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தில் நடை பெற உள்ள காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூர் கிராமத்தை சேர்ந்த விஜிகே மணி (எ) மணிகண்டன் (43) மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டால் காடுவெட்டி கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என காவல் துறை யினர் தெரிவித்துள்ளது.

இதன்பேரில் நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூர் கிராமத்தை சேர்ந்த விஜிகே மணி (எ) மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீன் சுருட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நுழைய இன்று காலை 10 மணி முதல் 10.2.19 வரை ஆர்டிஓ ஜோதி 144 தடை உத்தரவு விதித்துள்ளார்.

× RELATED (வெள்ளிக்கிழமை தோறும்) தொகுதி...