×

பச்சைப் பயறு தோசை

செய்முறை:

முதலில் பச்சைப் பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.  (காலை செய்வதாக இருந்தால்,  இரவே ஊற வைத்துவிடவும்.)  பின்னர் அதனை  தோசை மாவுப் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கிடையில், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி அனைத்தையும்  பொடியாக  நறுக்கிக் கொள்ள வேண்டும்.   பின்னர்,  அரைத்த  பச்சைப் பயறு மாவுடன்   நறுக்கி வைத்துள்ள  பச்சை மிளகாய் , இஞ்சி  உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள தோசை மாவில் சிறிதளவு, தோசையாக ஊற்றவும்.  அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி, எண்ணெய்யை ஊற்றி, திருப்பிப்போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். பச்சை பயறு தோசை ரெடி.

Tags :
× RELATED புரோட்டீன் லட்டு