×

வெள்ளைக் கறி

பக்குவம்

புளியை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும், சாறு எடுத்துக்கொள்ளவும். வெண்டைக்காய், கத்தரிக்காயை வெட்டி வைக்கவும். தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம் நன்றாக மிக்ஸியில் அரைக்கவும். ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, வெந்தயம், சின்ன வெங்காயம் மற்றும் வெண்டைக்காய் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து குழம்புப் பாத்திரத்தில் சேர்க்கவும். புளிச்சாறு, மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் தூள், மிளகாய்த் தூள் கத்தரிக்காய் சேர்த்து கட்டி ஆகாமல் கைகளால் நன்றாக கலக்க வேண்டும். அதை மிதமான தீயில் 15 நிமிடங்கள் வைக்கவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் நறுக்கிய மாம்பழம், தக்காளி மிளகாய்ப்பொடி சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு அரைத்த விழுது, சிறிது தண்ணீர் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். குழம்பு கெட்டியாகத் தோன்றினால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து, அடுப்பை அணைத்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். பின் வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து. குழம்புடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

Tags :
× RELATED ஜவ்வரிசி கொழுக்கட்டை