×

இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

திருச்சி, ஜன.23:  பள்ளிக் கல்வித்துறை சார்பில் 6 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.54.41 லட்சம் மதிப்பிலான 1,463 இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நேற்று நடந்தது.  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்து சைக்கிள்களை வழங்கி பேசுகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டு மற்றும் 2018-19ம் ஆண்டிற்கு 47,208 இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். இதில் அமைச்சர் வளர்மதி, எம்பி குமார், சிஇஓ ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா