×

வங்கி அதிகாரிகள், நிதி நிறுவனத்தினருடன் பாதுகாப்பு குறித்து போலீசார் ஆலோசனை

மணப்பாறை, ஜன.23:  பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் வங்கிகள், நகை அடகு கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் மணப்பாறையில் நடந்தது.  இக்கூட்டத்திற்கு மணப்பாறை இன்ஸ்பெக்டர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில்  நிறுவனங்களின் முன்புறமும் பின்புறமும் மற்றும் அதை சுற்றிலும் சிசிடிவி கேமரா அமைத்திட வேண்டும். தங்களது நிறுவனத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் அலாரம் பொருத்திட வேண்டும். அது சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தங்களது நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட இடங்களில் இரவு பகல் என்று தனித்தனியாக செக்யூரிட்டிகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
நிறுவனத்திற்குள் சம்பந்தமில்லாமல் உள்ளே பிரவேசிக்கும் சந்தேக நபர்களை பற்றி தகவல் தெரிந்தால் தங்களது காவல்நிலைய போன் மூலம் உடனே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திட வேண்டும். நிறுவனத்தின் ஜன்னல் கதவுகள் உறுதியாக உள்ளதா என ஆய்வு செய்து சரி செய்து கொள்ள வேண்டும். நிறுவனங்களில் சந்தேக நபர்கள் உள்ளே நுழைந்தால் அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர்களுக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் குறுந்தகவல் வரும்படி அமைத்துக் கொள்ளுதல் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் கூறப்பட்டது.  இக்கூட்டத்தில் மணப்பாறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் வங்கி மேலாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : bank officials ,institution ,
× RELATED விசாகப்பட்டினம் கல்வி நிறுவனத்தில்...