×

திருப்பரங்குன்றம் அருகே மீன் வளர்ப்புக்காக கண்மாயில் இருந்து தண்ணீர் திறக்க மறுப்பு 200 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்

திருப்பரங்குன்றம், ஜன.23:  திருப்பரங்குன்றம் பகுதியில் மீன் வளர்ப்புக்காக கண்மாயில் நீர் திறக்காததால் பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். திருப்பரங்குன்றம் அருகே உள்ளது பானாங்குளம் கண்மாய். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கண்மாய் மூலம் இப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  இப்பகுதியில் உள்ள நிலங்களில் தற்போது நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த கண்மாயில் மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்காக, விவசாயத்திற்கு தண்ணீரை திறக்க சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயிர்கள் கருகி வருகின்றன. விவசாய சங்க பிரதிநிதி முருகன் கூறுகையில், “அரசு அனுமதி இன்றி உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி மீன் வளர்ப்பிற்காக பொதுப்பணி துறைக்கு சொந்தமான இந்த கண்மாய் தற்போது தனி நபர் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கண்மாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பரியும் நிலையில் உள்ள நெல் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் ஏக்கருக்கு ரூ.35,000 அளவிற்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பொதுப்பணி துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.  எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக கண்மாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.
மந்திரிக்கு கைமாறியதா விவசாயிகளின் பணம்? விவசாயி ராஜமாணிக்கம் பேசுகையில், ‘‘கடந்த 2015ல் இருந்து இதுவரை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் நீர்பாசன விவசாய சங்க தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்காக விவசாயிகளிடம் வசூலித்த ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி என்ன ஆனது? அதை அதிகாரி துணையோடு, அமைச்சருக்கு வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறதே’’ என சரமாரியாக குற்றச்சாட்டினார். இதற்கு செயற்பொறியாளர், ‘‘நீர்பாசன விவசாய சங்க தேர்தல் தொடர்பாக விசாரித்து கூறுகிறேன்’ என மழுப்பலாக பதில் கூறினார். இதனை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். ஆனால் கடைசி வரை அதிகாரிகள் முறைகேடு தொடர்பாக பதில் கூற மறுத்துவிட்டனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை