×

பாலம் இடிந்ததால் விவசாயம் பாதிப்பு

திருப்பரங்குன்றம், ஜன.23: திருப்பரங்குன்றம் அருகே கழிவுநீர் கால்வாய் பாலம் இடிந்து விழுந்ததால் விவசாய பணிகள் பாதிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது பாம்பன் நகர். இப்பகுதியில் இருந்து குறுக்கட்டான் கண்மாய்க்கு செல்ல பாதை உள்ளது. இந்த பாதையை தான் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். நெல் அறுவடை இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள நிலையில் இங்குள்ள கழிவுநீர் கால்வாய் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அறுவடை பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக கதிர் அறுக்கும் எந்திரம், டிராக்டர் உள்ளிட்டவை இந்த பாதை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும். இது குறித்து பல முறை புகார் அளித்தும் மாநகராட்சியினர் கண்டு கொள்ளவில்லை. எனவே உடனடியாக இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...