×

கண்டமான கச்சைக்கட்டி சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்

வாடிப்பட்டி, ஜன.23: வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உபகோட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிபட்டி பங்களா முதல் பாலமேடு சாத்தையாறு அணை வரை உள்ள சாலை கிராமங்களை உள்ளடக்கிய மிக முக்கியமான சாலையாகும். ஆனால் இச்சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் அடிக்கடி விபத்து நடந்து வந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இப்பகுதி மக்களும் சாலையை சீரமைக்ககோரி பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கத்திடம் கோரிக்கையும் வைத்தனர். அதனை தொடர்ந்து தற்போது சி.ஆர்.ஐ.டி.பி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆண்டிபட்டி பங்களா முதல் பாலமேடு சாத்தையாறு அணைவரை 12 கி.மீ. தூரத்திற்கு சாலையை சீரமைக்க உத்தரவிடப்பட்டது.இதற்கான பூமிபூஜை நேற்று கச்சைகட்டி கேட்டுகடையில் நடைபெற்றது. பூமிபூஜையை மாணிக்கம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். கோட்டப் பொறியாளர் அரசப்பன், கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், உதவி கோட்ட பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி, உதவி பொறியாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி, பேரூர் செயலாளர் பாப்புரெட்டி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேஷ்கண்ணா, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கடைசி நாளில் அலைமோதிய கூட்டம்பொதுமக்கள் நிம்மதி வலையங்குளம் தொழில் பூங்கா
மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் வலையங்குளம் அருகே இண்டஸ்ரியல் பார்க் (தொழில் பூங்கா) அமைக்கப்படும் என 4 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இதனை உருவாக்கி, உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் முதலீடுகள் ஈர்க்க வாய்ப்புள்ளது.

Tags : Start-up ,
× RELATED தமிழ்நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனம்...