×

எலக்ட்ரிக்கல் கடையை உடைத்து ₹10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

பல்லாவரம், ஜன. 23: மாங்காடு அடுத்த பட்டூர் பிரதான சாலையை சேர்ந்தவர் கன்னிலால் (40). ராஜஸ்தானை சேர்ந்த இவர், கடந்த 13 ஆண்டுகளாக மல்லாராம் (60) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இருவருக்கும் இடையே வாடகை உயர்வு குறித்து பிரச்னை இருந்துள்ளது.இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் கொடுத்தபோது இருவரையும் போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது ஏப்ரல் மாதம் கடையை காலி செய்ய வேண்டும் என்று போலீசார் எழுதி வாங்கியதாக தெரிகிறது.நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு கன்னிலால் வீடு திரும்பினார். அப்போது அவரது கடையின் முன்பு ஒரு கார் மற்றும் சரக்கு வேன் வந்து நின்றன.

அதில் வந்தவர்கள் திடீரென கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ₹10 லட்சம் மதிப்புள்ள  எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அள்ளி சென்றுள்ளனர். இதுபற்றிய புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை வைத்து கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.பெரம்பூர்: புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் 2வது தெருவை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் முருகானந்தம் (48) வீட்டின் ஜன்னல் கிரிலை ஸ்குரு டிரைவர் மூலம் கழற்றி, உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த ₹2.5 லட்சம், 8 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Tags : theft ,shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி