×

போச்சம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பஸ்களில் சில்லரை பிரச்னையால் வாக்குவாதம்

போச்சம்பள்ளி, ஜன.22: போச்சம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பஸ்களில் சில்லரை பிரச்னையால் கடும் வாக்குவாதம் ஏற்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.போச்சம்பள்ளியில் இருந்து மத்தூர் வழியாக திருப்பத்தூருக்கு அரசு மற்றும் தனியார் பஸ்சுகள் இயங்கப்பட்டு வருகிறது. போச்சம்பள்ளியில் இருந்து திருப்பத்தூருக்கு 19 ரூபாய் கட்டணம் ஆகும். அதற்கு பயணிகள் 20 ரூபாய் கொடுத்தால் மீதி ஒரு ரூபாயை சில நடத்துனர்கள்  தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கண்டர்டர்களிடம் கேட்டால், “சில்லரையோடு பஸ் ஏறு. இல்லையேல், வீட்டிலேயே இரு” என்றும், வேறு பஸ்சில் வர வேண்டியது தானே  என தகாத வார்த்தைகளால் திட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக பயணிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மீதி சில்லரை 1 ரூபாயை கேட்டால் பாதியிலேயே இறக்கி விட்டு விடுவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.  இதனால், பயணிகள்-நடத்துனர்களிடையே  அடிக்கடி கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளதால் நடத்துனர்களுக்கு இது சதாகமாக மாறி வருகிறது. இதனால், பயணிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் பஸ் நடத்துனர்கள் பயணிகளுக்கு சரியாக சில்லரை வழங்காத ஒரு சில நடத்துனர்களால் மற்றவர்களுக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் பயணிகளுக்கு சரியான சில்லரை வழங்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Tirupattur ,Pochampalli ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...