×

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.22: கிருஷ்ணகிரியில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மன்னன் சிவா தலைமை வகித்து, எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அவைத்தலைவர் வடிவேலு, பொருளாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர்கள் சிங்காரம், சந்திரசேகர், ஈஸ்வரப்பா, பைரவன், குணசேகரன், சிவக்குமார், நாராயணன், பெருமாள், நகர செயலாளர்கள் பெரியசாமி, அந்தோணி, மகளிர் அணி ராம் சத்யா, வினோதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Tags : MGR ,meeting ,
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...