×

கிருஷ்ணகிரியில், ஏரி கால்வாயில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்

கிருஷ்ணகிரி, ஜன.22: கிருஷ்ணகிரியில், ஏரி கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள பாப்பாரப்பட்டி ஏரி நிரம்பினால், அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் திருவண்ணாமலை கூட்டுரோடு வரையிலும் சென்று அங்குள்ள ஏரியை அடைகிறது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் பாப்பாரப்பட்டி ஏரி எப்போது நிரம்புகிறதோ, அப்போதெல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
இந்நிலையில், ஏரியில் தண்ணீர் இல்லாததால் கால்வாய் வறண்டுபோய் காணப்படுகிறது.

இதனால், இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தையும் இந்த கால்வாயில் திருப்பி விட்டுள்ளனர். ஆனால், கழிவுநீரானது ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஏரி கால்வாயில் சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த கால்வாயை ஒட்டியுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் கொசுக்கடியால் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே, உடனடியாக இந்த கால்வாயை சீர் செய்து, கழிவுநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Krishnagiri ,lake canal ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்