×

குடிநீர் கேட்டு போராட்டம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பெண்கள் உட்பட 19 பேர் மீது வழக்கு

போச்சம்பள்ளி, ஜன.22: கிருஷ்ணகிரி அருகே குடிநீர் கேட்டு போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டது தொடர்பாக பெண்கள் உள்பட 19 ேபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருந்தியர் குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் சப்ளை செய்யாததால் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுதொடர்பாக மத்தூர் பிடிஓ அலுவலர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளமால் மெத்தனப்போக்கில் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் காலி குடங்களுடன் பிடிஓ அலுவலகம் முன் குவிந்தனர். ஆனால், அங்கு அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.

அப்போது, எங்கள் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து சாலை மறியல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு போலீஸ் அனுமதி மறுக்கவே போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக மத்தூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மஹப்புபாஷா(எ) பாபு மற்றும் 6 பெண்கள் உள்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளை பணி செய்ய விடமால் தடுத்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags : fight ,women ,police station ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்