×

நெடுங்கல் அரசு பள்ளிக்கு டெஸ்க், பெஞ்ச் வழங்கல்

போச்சம்பள்ளி, ஜன.22:  காவேரிப்பட்டணம் ஒன்றியம் நெடுங்கல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து ₹5 லட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச் வழங்கும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  குட்டி மாணிக்கம் தலைமை தாங்கினார். வக்கீல் சின்னதுரை முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்  சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார். அசோக்குமார் எம்.பி., ஒன்றிய அதிமுக செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளிக்கு டெஸ்க், பெஞ்ச் வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் சுப்பிரமணி, கஜேந்தின், ராஜா, முருகேசன், கோவிந்தசாமி மற்றும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவர்கள் , கூட்டுறவு சங்க தலைவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

Tags : Nedungal State School ,
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்